புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஏட்டுக்கு கொரோனா

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்ற முறை கொரோனா தொற்றின்போது அதிகமாக பாதிக்கப்பட்ட புளியந்தோப்பு பகுதியில் தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், புளியந்தோப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தேவி(35), கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 15ம் தேதி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவரின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். இதேபோல் புளியந்தோப்பில் பெண் தலைமை காவலராக பணியாற்றிவரும் லதா என்பவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 4 போலீசார் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.    

Related Stories: