மின்கம்பங்கள் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பரிதாப பலி

திருவெறும்பூர், ஜன.12: திருவெறும்பூர் அருகே துவாக்குடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தெற்கு தேநீர்பட்டிக்கு பழுதான மின் கம்பங்களை மாற்றுவதற்காக டிராக்டரில் புதிய மின்கம்பங்கள் ஏற்றிச் சென்றபோது திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் வாலிபர் பலியானார். டிரைவர் உட்பட இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவெறும்பூர் அருகே பழங்கனாங்குடி ஊராட்சிக்குட்பட்டது தெற்கு தேனீர்பட்டி. இந்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றுவதற்கு துவாக்குடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து நேற்று டிராக்டரில் 6 புதிய மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் என்ஐடி கல்லூரி மேம்பாலத்தில் இருந்து டிராக்டர் இறங்கியபோது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் அமர்ந்திருந்த தெற்கு தேனீர்பட்டியை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகன் ராஜ்குமார்(25) என்பவர் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டர் ஓடிவந்த தெற்கு தேனீர்பட்டியை சேர்ந்த கதிர்வேல்(38), இவர் பழங்கனாங்குடி வார்டு உறுப்பினராக உள்ளார். அவருடன் மற்றொருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்த தூத்துக்குடி போலீசார் சம்பவயிடம் சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: