மகனுடன் தகராறு: தாய் தற்கொலை முயற்சி

திருச்சி, ஜன. 12: திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கஸ்தூரி(61). சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்த நாராயணன் கடந்த 2 தினங்களுக்கு முன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் அருகே உள்ள மகன் ஹரிஹரசுதன் வீட்டில் கஸ்தூரி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு தாய், மகனுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கஸ்தூரி, விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: