டிஆர்ஓவுக்கு கொரோனா

திருச்சி, ஜன.12: திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக (டிஆர்ஓ) பழனிக்குமார் பணியாற்றி வருகிறார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன் களப்பணியாளர், சுகாதாரப் பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதை கடந்தவர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. அப்போது கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டிஆர்ஓ பழனிகுமாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானதில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரிய அறிகுறிகள் ஏதும் இல்லாததால் அவர் முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எந்த அறிகுறியும் இல்லாததாலும், ஏற்கனவே அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பதாலும் சில நாட்களிலேயே அவர் பணிக்கு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: