பிரபல ரவுடி கைது

சேலம்: சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரைமூக்கன் (எ)செல்வகுமார்(51). இவர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனிடையே செல்வகுமார் திடீரென வீட்டை காலி செய்து தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது.இந்நிலையில் நேற்று விலை உயர்ந்த சொகுசு காரில் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியில் செல்வகுமார் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே சைக்கிளில் வந்த ஒருவரை இடித்து தள்ளியுள்ளார்.

இதையடுத்து சைக்கிளில் வந்தவர் செல்வகுமாரிடம் தட்டிக்கேட்டபோது அவரை பட்டா கத்தியை எடுத்து வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரவுடி செல்வகுமாரை சுற்றிவளைத்து  கைது செய்தனர்.

Related Stories: