இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த காதல் கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி அருக பெரியகோட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(26). கார் டிரைவரான இவர், பானுப்பிரியா(எ)அர்ச்சனா(23) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி நடைபெற்றது. இதற்கு யுவராஜின் தாய் அமுதவள்ளி(48), அண்ணன் பார்த்திபன்(31) ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காதல் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. யுவராஜ் தனது தாயார் அமுதவள்ளி, சகோதரர் பார்த்திபன் ஆகியோருடன் சேர்ந்து பானுப்பிரியாவை சாதி பெயரை கூறி திட்டியுள்ளார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பானுப்பிரியாக புகார் அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி விஜயராகவன் விசாரித்து யுவராஜ், அமுதவள்ளி மற்றும் பார்த்திபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: