கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

காரிமங்கலம்: காரிமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நடந்த காரிமங்கலம் வாரச்சந்தையில், பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், தலைமை எழுத்தர் பெருமாள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு, முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு  முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் ராமசாமி கோயில் கடைவீதி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்று, வணிக நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது‌. சாலைகளில் முகக்கவசம் அணியாமல், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

Related Stories: