ரேசன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மணலூர் பஸ் ஸ்டாப்பில் மானாமதுரை பகுதியில் இருந்து மதுரைக்கு ரேசன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்ததும் டிரைவர் தப்பி ஓடிவிட்டனர். தகவல் கிடைத்ததும் திருப்புவனம் வட்ட வழங்கல் அலுவலர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்த 75 அரிசி சிப்பங்கள் சுமார் 2.5 டன் இருந்தது. உடனே அரிசி சிப்பங்களை பறிமுதல் செய்து திருமாஞ்சோலை தமிழ்நாடு வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர். சிவகங்கை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.ஐ.முத்துக்கிருஷ்ணராஜா, எஸ்.எஸ்.ஐ.செளந்தரராஜன் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: