90 வது நினைவு தினம்: திருப்பூர் குமரன் சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர்:  திருப்பூர் குமரனின் 90வது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  திருப்பூர் குமரனின் 90வது நினைவு தினத்தையொட்டி நேற்று திருப்பூர் குமரனின் உருவ சிலைக்கு தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர். நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிவசேனா கட்சி இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில், சிவசேனா மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில், மாவட்ட துணை செயலாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, உள்ளிட்ட பலர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநகர அவைத்தலைவர் நேமிநாதன் தலைமையில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பள்ளி மாணவிகள்: அதே போல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் குமரனின் உருவ படத்திற்கு மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையிலானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்திவிட்டு படியில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: