டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

ஊட்டி: நீலகிரி கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நீலகிரி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ம் தேதி வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான (சில்லறை விற்பனை) விதிகள் 1989 ஆகியவற்றின் படி டாஸ்மாக் மதுபான கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எந்த விதமான மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது.

மேற்படி, நாட்களில் டாஸ்மாக் கடைகள், கிளப்கள், பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள யூனிட் 1 மற்றும் 2ல் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனை கடைகள் ஏதும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில் அந்த விவரத்தை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423-2234211, ஊட்டி கூடுதல் எஸ்பி., 0423-2223802, உதவி ஆணையர் (ஆயம்) 2443693 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: