தள்ளுவண்டியில் மது அருந்த அனுமதி: பெண் உள்பட 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு தெற்கு போலீசார் குமலன்குட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள ஒரு தள்ளுவண்டியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து அங்கு சென்று பார்த்த போது, மது அருந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தள்ளுவண்டியில் மது அருந்த அனுமதித்ததாக புதுக்கோட்டை, தென்நகர் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், சூரம்பட்டிவலசு, லட்சுமிநகரில் தள்ளுவண்டி கடையில் மது அருந்த அனுமதித்த ஈரோடு சங்குநகர், பட்டேல் வீதியை சேர்ந்த பிரபாகரன் மனைவி வளர்மதி (38), சூரம்பட்டி பட்டேல் வீதியை சேர்ந்த சுரேஸ் மகன் ஸ்ரீகாந்த் (21) ஆகியோரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: