டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், 18ம் தேதி வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாள்களும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் தனியார் பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினங்களில், மதுபான விற்பனை நடைபெறாது. மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: