சிறுபான்மையின மாணவர்களுக்கு ஒன்றிய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு: வரும் 15ம் தேதி கடைசி நாள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாட்டில் சிறுபான்மையின மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு முதல் பிஎச்டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) படிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து நடப்பாண்டுக்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுவதற்கான (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த காலத்துக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: