தோண்டாங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

வாலாஜாபாத்: தோண்டாங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைத்து, கிராம மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தோண்டாங்குளம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால், மின்தடை ஏற்பட்டு  கிராம மக்களின் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், மின்விசிறி உள்பட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. இதையொட்டி, மின் அழுத்தத்தை சமாளிக்க தோண்டாங்குளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், கிராமத்தில் சென்று ஆய்வு ெசய்து, புதிய மின்மாற்றி அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, புதிய மின்மாற்றி அங்கு அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான துவக்க விழா தோண்டன்குளம் கிராமத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட 100 கிவோ மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ஹரிதாஸ், பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர் ஞானவேல், முன்னாள் தலைவர் எல்லப்பன், சேஷாத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: