எனது கரூர் எனது பொறுப்பு பொது சுகாதார விழிப்புணர்வு மாநகராட்சியில் புதிய திட்டம் அறிமுகம்

கரூர், ஜன. 12: கரூர் மாநகராட்சியில் பொது சுகாதாரத்தை வலியுறுத்தி எனது கரூர் எனது பொறுப்பு என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்தை பேணி காத்திடவும் மக்களிடம் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுவதை காத்திட கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் \”எனது கரூர் எனது பொறுப்பு \”என்ற உன்னத நோக்கத்துடன் பொதுமக்களே சுகாதாரத்தை காத்திட பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சி வாகனம் வரும் பொழுது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி ஊழியரிடம் கொடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பொது இடங்களை சுத்தம் செய்து அதில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் கோலமிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மகாத்மா காந்தி சாலையில் சுகாதார அதிகாரி லட்சிய வர்ணா ஏற்பாட்டில் துப்புரவுப் பணியாளர்களே குப்பை கொட்டும் இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றி நமது கரூர் நாமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூந் தோட்டம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட வாசங்களை கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மத்திய மேற்கு நகர செயலாளர் அன்பரசன் ,சுகாதார ஆய்வாளர் சுகுமார் , வார்டு செயலாளர் ரமேஷ் மற்றும் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: