கொரோனா தொற்று சிகிச்சைக்கு 1988 படுக்கைகள் தயார் நிலை

கரூர், ஜன. 12: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவடிவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி 126 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1,601 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 387 படுக்கைகள், என மொத்தம் 1,988 படுக்கைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன. தேவையான எண்ணிக்கையில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. மேலும், தாந்தோணி அரசு கலைக்கல்லுரி செட்டிநாடு பொறியியல் கல்லூரி மற்றும் குமாரசாமி பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையத்தில் அனைத்து அடிப்படைவசதிகளுடன் 445 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Related Stories: