24ம் தேதி அங்கப்பிரதட்சன போராட்டம்

பண்ருட்டி, ஜன. 11:  பண்ருட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கூட்டம் நகர குழு உறுப்பினர் தினேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் (விகேடி) சாலைப் பணி பல ஆண்டுகள் கடந்தும் நிறைவேறாத காரணத்தால் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடியவர்களுக்கு பள்ளம் படுகுழி தெரியாமல் விழுந்து உயிர் இழப்பும், உடல் உறுப்பு இழப்பும் ஏற்படுகிறது. இந்த வழியாக தொடர்ந்து செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சரக்கு வாகனங்களுக்கு பெருமளவில் உதிரிபாகங்கள் உடைந்து பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், சாலையில் பறக்கும் புழுதிப் புயலால் சுவாசக் கோளாறு, நோய்த்தொற்று அபாயமும் ஏற்படுகிறது. ஆதலால் இந்த சாலை பணிகளை உடனடியாக விரைந்து நிறைவேற்றக் கோரி வரும் 24ம் தேதி பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை வரை சாலையில் படுத்து உருளும் (அங்கப்பிரதட்சனம்) போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நகர செயலாளர் உத்திராபதி, சங்கர், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, முகமது நிசார் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: