கடன் பிரச்னையால் விரக்தி விருத்தாசலம் தனியார் லாட்ஜில் அரசு ஊழியர் தற்கொலை முயற்சி

விருத்தாசலம், ஜன. 11:  சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் அருகே வானமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் மகன் சீனிவாசன் (44). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தற்போது இடமாறுதல் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்ைச பெற்று வருகிறார்.

 இதுகுறித்து, போலீசார் விசாரணையில், சீனிவாசன் சில நாட்களாக கடன் பிரச்னையால் தவித்து வந்துள்ளார். இதனால் வீட்டில் யாருக்கும் சொல்லாமல் விருத்தாசலம் வந்துள்ளார். தொடர்ந்து ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு, தான் தங்கியுள்ள இடத்தையும், பூச்சி மருந்து குறித்த தகவலையும், தனது உறவினர் ஒருவருக்கு மொபைல் போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் லாட்ஜிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, சீனிவாசன் மயக்க நிலையில் கிடந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: