தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

தூத்துக்குடி, ஜன. 11: ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட  இளவேலங்கால் பஞ்சாயத்து அயிரவன்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் பொங்கல்  பரிசுத் தொகுப்பு பொருட்களை சண்முகையா எம்எல்ஏ பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர்  தலைவர் சாவித்ரி முருகேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும்  பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். கோவில்பட்டி: நாலாட்டின்புதூர் ரேஷன் கடையில் பஞ்சாயத்து தலைவர் கடல்ராணி அந்தோனிராஜ் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். நாலாட்டின்புதூர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த பஞ்சாயத்து தலைவர் கடல்ராணிஅந்தோனிராஜ், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை  வழங்கினார். இதில் கூட்டுறவு சங்கத்தலைவர் சேகர், தாமோதரகண்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நாசரேத்: நாசரேத் அருகே மூக்குப்பீறி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.  தலைமை வகித்த ஊராட்சி தலைவர் கமலா கலையரசு, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை துவக்கிவைத்தார். இதில் ஊராட்சி உறுப்பினர் கலையரசு, திமுக கிளைச் செயலாளர்கள் மோசஸ் கிருபைராஜ், பாலையா, அவைத்தலைவர் ஜான்சன், மகளிர் குழு கூட்டமைப்பு செயலாளர் பானுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கயத்தாறு: கயத்தாறு அருகே தெற்கு கோனார்கோட்டை, சிதம்பரம்பட்டியில்பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கியது.  கயத்தாறு யூனியன், செட்டிகுறிச்சி ஊராட்சி தெற்குகோனார்கோட்டை, சிதம்பரம்பட்டி ஊராட்சி சிதம்பரம்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகளை திமுக கயத்தாறு மேற்கு ஒன்றியச்செயலாளர் கருப்பசாமி வழங்கினார். இதில் செட்டிகுறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் ஐயப்பன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் மகாராஜன், கிளைச் செயலாளர் செந்தூர்பாண்டியன், மாரியப்பன், கிளை பிரதிநிதி செண்பகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

ஏரல்:  நட்டாத்தி மற்றும் செட்டிகுளம் ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா  நடந்தது. தலைமை வகித்த சாயர்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தலைவரும், திமுக செயலாளருமான அறவாழி, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தைத் துவக்கிவைத்தார். இதில் நட்டாத்தி பஞ்சாயத்து தலைவி சுதாகலா, வங்கி ஊழியர்கள் கிருபாகரன், தவமணி, ஆனந்த் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை திமுக வடக்கு ஒன்றியச்  செயலாளரான பஞ்சாயத்து தலைவர் இளையராஜா துவக்கிவைத்தார். இதில் பஞ். துணைத்தலைவர் அரிஹரன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், உலகையா, வானவராயன், ராமகிருஷ்ணன் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள், ஊர் மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதே போல் குறுக்குச்சாலை ரேஷன் கடையில்   பொதுமக்களுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் துணை சேர்மன் காசிவிஸ்வநாதன் பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கினார்.

Related Stories: