கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம்

திருச்சி, ஜன.11: திருச்சியில் ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. பாப்பாத்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன் கலந்துகொண்டு கோரிக்கைள் குறித்து பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் அனைத்து உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற அனைவருக்கும் பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 50 வயதிலும், ஆண்களுக்கு 55 வயதிலும் மாத மாதம் ரூ.6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அனைத்து செலவையும் வாரியமே ஏற்கவேண்டும். பிரசவகால நிதியாக 6 மாத விடுப்புடன் ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய கிளை செயலாளர் முத்துமாரி நன்றி கூறினார்.

Related Stories: