111 மனுக்களுக்கு தீர்வு பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம்

பெரம்பலூர்,ஜன.11: பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஊராட்சிகளுக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டு காலம் அதிகமாகிறது. எனவே, வரக்கூடிய பொங்கல் திருநாளையொட்டி அனைவரின் பங்களிப்புடன் ஊரக பகுதியில் ஒரு சிறப்பு இயக்கமாக பல்வேறு தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம் பூசப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மீண்டும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் வைக்க வேண்டும்.

மாதந்தோறும் 5 மற்றும் 20ம் தேதிகளில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பேரிடரிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ள இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதும், எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பதும், பொது இடங்களில் சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதும் அவசியமாகிறது. எனவே, பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், முகக்கவசம் முறையாக அணியவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளவும், ஒமிக்கிரான் போன்ற தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தொடர்புடைய அலுவலர்களை ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் அனைத்து ஊரக பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

Related Stories: