ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி

கரூர், ஜன. 11: குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உப்பிடமங்கலம் பேரூராட்சி லிங்கத்தூர் நியாயவிலைக்கடையில் நேற்று ஆய்வு செய்தார். பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான பொருட்களின் தரம் குறித்து ஒவ்வொரு பையிலும் உள்ள பொருட்களையுமம் ஆய்வு செய்த கலெக்டர் பொருட்களை வாங்கிச்சென்ற பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றதா என்றும், தரமாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

Related Stories: