நளினி- முருகன் சந்திப்பு வேலூர் மத்திய சிறையில்

வேலூர், ஜன.11: வேலூர் மத்திய சிறையில் நளினி முருகன் சந்தித்து பேசினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி நளினி பரோலில் வெளியே வந்து காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படி நளினியும், முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வந்த நிலையில் தற்போது பரோலில் உள்ள நளினி, முருகனை சந்திக்க அனுமதி கேட்டு வேலூர் எஸ்பியிடம் மனு அளித்தார். இதையடுத்து சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைதொடர்ந்து நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடியில் இருந்து நளினி வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டார். அங்கு காலை 10.55 முதல் 11.25 வரை இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் நளினியை மீண்டும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் காட்பாடி பிரம்மபுரத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Related Stories: