சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.66,000 அபராதம்

சென்னை: தாம்பரம் பகுதியில் விபத்துகளை தவிர்க்க, சாலைகளில் மாடுகள் திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மீண்டும் பவுண்டு முறை அமைக்கவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 33 மாடுகளை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.66,000 அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: