பொதட்டூர்பேட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி, பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, பொதட்டூர்பேட்டை பஸ் நிலையம் அருகில் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா (பொறுப்பு) முன்னிலையில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், கலைக்குழுவினர் பங்கேற்று நாடகம் மற்றும் பாடல்கள் வாயிலாக  விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய் பரவல் கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பேரூராட்சி அலுவலர்கள் குப்பன், ஜெய்சங்கர் உட்பட தூய்மை பணியாளர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Related Stories: