பழவேற்காட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு சுற்றுலா பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று முன்தினம் முழு ஊரடங்கை முன்னிட்டு பழவேற்காடு பகுதியில் வாகனத்தில் வருவோரை சரியான காரணங்கள் கேட்டு திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில், எஸ்ஐ சபாபதி மற்றும் போலீசார் அனுப்பி வைத்தனர். அப்போது, முக கவசம் இல்லாதவர்களுக்கு முககவசம் வழங்கினர். மேலும், தேவையின்றி வெளியே நடமாடியவர்களை எச்சரித்தும் அனுப்பினர்.

முழுஊரடங்கை முன்னிட்டு பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பழவேற்காட்டை ஒட்டியுள்ள காமராஜர் துறைமுகம், அதானி மற்றும் எல்அன்என்டி துறைமுகங்கள் ஆகிய பகுதிகளுக்கு பழவேற்காடு வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை சோதனையிட்டு அனுப்பினர். மண்டல துணை வட்டாட்சியர் காயத்ரி, விஏஓ திருநாவுக்கரசு, பழவேற்காடு ஊராட்சி தலைவர் சரவணன், கோட்டைக்குப்பம் ஊராட்சி தலைவர் சம்பத், பழவேற்காடு மீன் விற்பனை கூட்டுறவு ஒன்றிய சங்க துணைத் தலைவர் சந்திரசேகர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: