உரிமை கோராத, பறிமுதல் செய்த 1896 வாகனங்கள் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 1896 வாகனங்கள்  ரூ.1,11,29,624க்கு ஏலம் விடப்பட்டது. காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்களை 2 மாதத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பொது ஏலம் நடத்தி, அரசு கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் உள்ள யாரும் உரிமைகோராமல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பறிமுதல் செய்த பைக், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்களை கணக்கிட்டு காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், பொது ஏலம் விடுவதற்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கலெக்டர் ஆர்த்தி, உத்தரவின்படி, அதற்கான குழு அமைத்து, வாகனங்களை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டது. அதில், பறிமுதல் செய்யப்பட்ட 1896 வாகனங்களை ஏலமிட்டு ரூ.1,11,29,624 வசூலிக்கப்பட்டது. அந்த தொகை, மாவட்ட வருவாய் கணக்கில் செலுத்தி கலெக்டர் ஆர்த்தியிடம், எஸ்பி சுதாகர் நேற்று  வழங்கினார்.

Related Stories: