வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் நகராட்சி ஆணையர் ஆலோசனை

திருச்செங்கோடு, ஜன.9: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன், நகராட்சி ஆணையாளர் கணேசன் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என ஆணையாளர் கணேசன் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காவல் துறையினர், வியாபாரிகள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: