காப்பர் கம்பி திருடியவர் கைது

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 31ம் தேதி தர்மபுரி போலீசில் புகார் அளித்தார். அதில் இலக்கியம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில், 93அடி கொண்ட ₹10 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கீழ் புளியூர் பகுதியை சேர்ந்த பழனி முருகன் (37) என்பவர் காப்பர் கம்பிகளை திருடிச்சென்றிருப்பது தெரிந்தது.  இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: