11ம் தேதி முதல் பொங்கலுக்கு சிறப்பு பஸ் இயக்கம் மேலாண்மை இயக்குநர் தகவல்

காரைக்குடி, ஜன.9:  காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் லிட் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக சென்றுவர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டான், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்கு 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை பஸ் இயக்கப்பட உள்ளது. திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூரில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக்கழக இயக்கப்பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 11 முதல் 13ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. பொங்கல் முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்பும் வகையில் 16ம் தேதி முதல் 18ம் தேதிவரை சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள என தெரிவித்துள்ளார்.

Related Stories: