முன்னாள் மாணவர்கள் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்

காரைக்குடி, ஜன. 9; காரைக்குடி அழகப்பா மாடல் பள்ளியில் 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு என தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைத்து 100க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். இக்குழுவில் உள்ள நண்பர்களின் சொந்த பணத்தில் நிதி திரட்டி ஒவ்வொரு ஆண்டும் நலத்திட்ட உதவிகள் செய்துவருகின்றனர். கடந்த ஆண்டு தாங்கள் படித்த பள்ளிக்கு தற்போது படிக்கும் மாணவர்கள் பயன்படும் வகையில் கை கழுவ குழாய் அமைத்து கொடுத்தனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் கணவனை இழந்த தாங்கள் சுய தொழில் செய்து வாழும் வகையில் தையல் இயந்திரம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், `` எங்களுடன் மேல்நிலைக் கல்வி வரை படித்த மாணவர்களை இணைத்து இக்குழுவை துவங்கியுள்ளோம். எங்களின் சொந்த நிதியில் இருந்து உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதுபோன்று இப்பள்ளியில் படித்த அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒன்றாக இணைந்து சேவை பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்’’ என்றனர்.

Related Stories: