முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

 அதன் விவரம்:

* பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இன்று ஞாயிற்றுகிழமையன்று முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றக் கூடாது.

* அத்தியாவசியப் பணிகளான ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், தினசரி பத்திரிகை விநியோகம், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

*  முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் அடையாள அட்டைகள் அணிந்திருக்க வேண்டும்.

* உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

* மேலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் நபர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை போலீசார் சோதனையின் போது காண்பித்து, தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.  

* வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செல்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

Related Stories: