தமிழக போதைப்பொருள் நுண்ணறிவு அதிரடி 561.3 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: தமிழக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் கண்காணிப்பில், கூடுதல் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர், துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 7ம் தேதி ஆந்திர மாநிலம் வழியாக தமிழகம் வரும் ரயில்களில் இரு மார்க்கமாக சோதனை செய்தனர்.  அதில் தலா 21 கிலோ மற்றும் 5.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் ெசய்து மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி மற்றும் இருளப்பனை கைது செய்தனர்.

சென்னை நோக்கி வந்த சர்க்கார் அதிவிரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 21 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் திருப்பூரை சேர்ந்த குணா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரை கைது ெசய்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கடந்த டிசம்பர் 6ம் தேதி முதல் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சிறப்பு இயக்க காலத்தில் தமிழக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு 50 வழக்குபதிவு ெசய்யப்பட்டு 47 குற்றவாளிகள் கைது செய்ததுடன் 561.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: