கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விளை நிலத்தில் 2 மலை பாம்புகள் மீட்பு

சின்னசேலம், ஜன. 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், கல்வராயன்மலை அடிவார பகுதியில் உள்ள விளை நிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி மரவள்ளி பயிரிட்டுள்ள வயலை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது வயலில் 2 மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் வீரபாண்டியன், நாகேஸ்வரன், கழகமணி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 7 அடி நீளமுள்ள 2 மலை பாம்புகளையும் பிடித்து கச்சிராயபாளையம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவிந்தராசு, சின்னதுரை உள்ளிட்டோர் அவைகளை எடுத்து சென்று பரிகம் வனப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விட்டனர். விளை நிலத்தில் மலைப்பாம்புகள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: