கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி

கயத்தாறு, ஜன. 9: கயத்தாறு அருகே  வடக்கு இலந்தைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை கயத்தாறு யூனியன் சேர்மன் மாணிக்கராஜா துவக்கிவைத்தார். கயத்தாறு யூனியன், வடக்கு இலந்தைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கலாவதி வரவேற்றார்.

 இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கயத்தாறு யூனியன் சேர்மனும், அமமுக தென்மண்டல பொருப்பாளருமான கடம்பூர் இளைய ஜமீன்தார் மாணிக்கராஜா, சுற்றுச்சுவர் கட்ட அடிக்கல் நாட்டியதோடு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினார். இதில் கயத்தாறு பிடிஓக்கள் (வட்டார ஊராட்சி) அரவிந்தன், (கிராம ஊராட்சி) பானு, அமமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்வுமான சிவபெருமாள், கயத்தாறு மேற்கு ஒன்றியச் செயலாளர் கணபதி பாண்டியன், அம்மா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் உடையார் பாண்டியன், வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி, துணைத்தலைவர் முத்தையா, அலுவலர் மல்லிகா,செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சங்கிலிப்பாண்டியன், மாணவரணி துணைச் செயலாளர் முத்துமாலை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: