உடன்குடி, ஜன. 9: மெஞ்ஞானபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். கடன் சங்க தலைவர் ஆதிலிங்கம், பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜாபிரபு, திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் முன்னிலை வகித்தனர். விழாவில் உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கத் தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தக அணி இளங்கோ, மாணவரணி ராஜாபிரபு, கேடிசி தினகர், திமுக நிர்வாகிகள் ரஜினிகாந்த், சம்பத், மானாடு கிளைச்செயலாளர் சுடலைக்கண், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.