கரூர், ஜன.9: பொது ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை செயல்பட இருப்பதால் நேற்று சனிக்கிழமை பொதுமக்கள் உழவர் சந்தை மற்றும் காமராஜர் மார்க்கெட் பொருட்களை வாங்க மக்கள் திரண்டனர்.தமிழக அரசு கொ ேரானா பரவல் கட்டுப்படுத்துவதற்காக 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு ஆக அறிவித்தது. இதனால் நேற்று சனிக்கிழமை கரூர் உழவர் சந்தை ,கரூர் காமராஜர் தினசரி மார்க்கெட் கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மக்கள் காய்கறி கீரை வகைகள் மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள மளிகை கடைகளில் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க திரண்டனர்.மேலும் நேற்று கரூர் உழவர் சந்தை பகுதியில் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு உழவர் சந்தையில் கடை வைத்துள்ள உழவர்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கினார். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க குவிந்தனர்.கரூர் காமராஜர் மார்க்கெட்டில் கடல் மீன்கள் குளத்து மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்கள் பெருமளவில் கடைகளில் விற்பனை செய்யப்படும் தான் அந்த மீன்களை வாங்குவதற்கும் மார்க்கெட்டில் அமைந்துள்ள இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வழி போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.