ஆடு திருடியவர் கீழே விழுந்து படுகாயம்

கிருஷ்ணராயபுரம், ஜன.9: கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் நடராஜபுரம் காலனியை சேர்ந்த நடேசன் மகன் சுப்பிரமணி(42). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டில் இருந்த ஆடுகளை கட்டளையைச் சேர்ந்த பொய்யமணி மகன் முருகானந்தம் என்பவர் திருடி தூக்கிக்கொண்டு தப்ப முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரையும் கண்டதும் ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடி உள்ளார். அப்போது முருகானந்தம் கீழே விழுந்ததில் கல்லில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். சுப்பிரமணி அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.இதுகுறித்து சுப்பிரமணி மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: