அனுமதியின்றி வைத்திருந்த 88 மணல் மூட்டைகள் பறிமுதல்

குளித்தலை, ஜன.9: குளித்தலை அருகே மேல குட்டபபட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் திருடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மணல் சாக்கு மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கலுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார், அங்கு மேலகுட்டப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் வீட்டு முன்பாக மணல் மூட்டைகள் இருந்ததால் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு மணல் மூட்டைகள் எப்படி இஙகு வந்தது, என்ன காரணத்திற்காக வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் கூறியதால் 88 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது, தொடர்ந்து மேலகுட்டப்டியைச் சேர்ந்த ரவியிடம் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: