நெல் தரிசு வயலில் பயறு விதைகளை பயிர் செய்ய வேண்டும்

செந்துறை,ஜன.9: செந்துறை வட்டார நெல் விவசாயிகளை நெல் தரிசு வயலில் பயறு வகை பயிர்களை பயிரிட்டு அதிக லாபம் அடைந்திட வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜென்சி கேட்டுக்கொண்டுள்ளார்.நெல் சம்பா அறுவடைக்கு பிறகு பயறு வகை பயிர்களான உளுந்து, துவரை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை ஆகிய பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை பயறுவகை சாகுபடி செய்தால் மண்ணின் வளம் மேம்படும், மனிதனின் புரத தேவைக்கு உற்பத்தி, மண் வளம் உயர்வு குறைந்த நாளில் குறைந்த நீரில் அதிக வருவாய் போன்றவை பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதால் கிடைக்கிறது.

குறிப்பாக சம்பா நெல் அறுவடைக்கு பிறகு நெல் வயல்களில் இருக்கும் ஈரப்பதத்தினை பயன்படுத்தியும் பாசன வசதி உள்ள இடங்களில் இறவை பயிராகவும் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம். மேலும் பூக்கும் பருவத்தில் 2 சதவீத டி.ஏ.பி கரைசல் இலைவழி ஊட்டமாக அல்லது பயறு ஒண்டர் நுண்ணூட்ட உரம் ஏக்கருக்கு 2 கிலோ அளிப்பதன் மூலம் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதுடன் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு அதிக காய்கள் பிடிக்கவும், காய்களின் எடை மற்றும் மகசூல் அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: