படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு கடனுதவி: கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டத்தில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசின் கடனுதவி அளிக்கப்படுவதாக கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி பொருளாதார முன்னேற்றம் அளிக்கும் பொருட்டு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதையொட்டி, நடப்பு நிதியாணடில் 195 பேருக்கு 125 லட்சம் மானியம் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை 84 பேருக்கு 74 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் அரசு அளிக்கும் சலுகைகள்:

1. குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது பொதுபிரிவினருக்கும், 45 வயது சிறப்பு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. கல்விதகுதி - குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்,

3. குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் உற்பத்தி தொழிலுக்கு 15 லட்சமும், சேவை மற்றும் வியாபாரத்திற்கும் 5 லட்சமும், கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். உற்பத்தி தொழிலுக்கான திட்ட மதிப்பு 15 லட்சமாக வழங்கப்படுகிறது.

4. கொரோனா தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

5. திட்ட மதிப்பில் 25 சதவிகிதம் மானியம் 2.5 லட்சமாக வழங்கப்படுகிறது.

6. தகுதியுள்ள நபர்கள் www.msmeonline.tngov.in/uyego என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பத்தினை இருநகல்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், திருவள்ளுர் அடுத்த காக்களுர் சிட்கோ தொழிற்பேட்டை, தபால் நிலையம் அருகில் என்ற முகவரியை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: