பள்ளி மாணவி கர்ப்பம் கல்லூரி மாணவனுக்கு வலை: இன்ஸ்டாகிராம் தொடர்பால் விபரீதம்

ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி, தேவர் நகரில்  ஒரு தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறாள். நேற்று முன்தினம் சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பெற்றோர், அவரை சென்னை அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இதற்கிடையில், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரித்தார்.

 அதில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் (20) என்பவருடன், கடந்த 6 மாதத்துக்கு முன் சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம்  தொடர்பு ஏற்பட்டது. பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைதொடர்ந்து,  கடந்த 2 மாதத்துக்கு முன் சஞ்சய் பாடிக்கு வந்துள்ளார். அங்கிருந்து சிறுமியை, தனது பைக்கில் அழைத்து கொண்டு அவர் சென்னை முழுவதும் சுற்றி திரிந்தார். அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர் சஞ்சயை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: