வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலையில்லா பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளுர்: திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை.திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 ஆண்டும் போதுமானது.

உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான //velaivaipu.gov.in அல்லது //employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விஏஓ மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து 28ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும்  நகல்களுடன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருந்து சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: