கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதியில்  தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் அரிசியை, சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, அதை பதுக்கி வைத்து  ஆந்திராவுக்கு   கடத்துவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு தகவல் வந்தது.  ‌‌அவரது உத்தரவின்படி, திருத்தணி டிஎஸ்பி சாய்பிரினித் தலைமையில்,  உதவி  ஆய்வாளர் ராக்கி குமாரி, பொதட்டூர்பேட்டை அடுத்த எஸ்கேஆர் பேட்டையில் தீவிர சோதனை நடத்தினார்.

அப்போது, அங்குள்ள கோழிப்பண்ணையில், ஏராளமான மூட்டைகளாகவும், கோபுரம் போல் குவித்து வைத்திருந்ததையும் கண்டு பிடித்தனர். அவை, ரேஷன் அரிசி என தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்து சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளர் கோவிந்தராஜ் என்வபவரது நண்பரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: