வேலூரில் நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர், ஜன.8: வேலூரில் நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். வேலூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருக்கும் சாலைகளையும் ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்து வியாபாரம் மேற்கொள்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து தோட்டப்பாளையம் வரை சாலை ஓரத்தில் சிலர் பங்க் கடைகள், தரைக்கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதுகுறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ள நெடுங்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று நெடுங்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் கடைகளை வைத்து வியாபாரம் செய்யதால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று

Related Stories: