பொதுவேலை நிறுத்த ஆயத்த மாநாடு

திருப்பூர், ஜன.8:  ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்.,23, 24 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது தொடர்பான ஆயத்த மாநாடு கே.ஏஸ்.ஆர். திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. எல்.பி.எப் மாவட்ட துணை ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் கோபுகுமார், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலாளர் சேகர், ஐ.என்.டி.யு.சி மாவட்ட செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துசாமி, எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் சம்பத், எம்.எல்.எப். பனியன் சங்க செயலாளர் மனோகர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில், பணமயமாக்கள் என்ற பெயரில் பொதுத் துறைகளை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் கம்ெபனிகளுக்கு விற்று வருகிறது. சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கத்தில் பல இடங்களில் ஆட்சியாளர்கள் பேசி வருவது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற பிப்ரவரி 23. 24 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்று அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவுக்கு ஏற்ப, திருப்பூரில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முழு வெற்றி பெற வருகிற 26ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் ‘நாட்டைக் காப்போம்’, ‘மக்களைக் காப்போம்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்துவது என்றும். அதை தொடர்ந்து பிரச்சார இயக்கம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: