ரேஷன் கடையில் தகராறு செய்த பாஜ நிர்வாகி

திருமுருகன்பூண்டி, ஜன. 8:  திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் ரேஷன் கடைக்கு பொங்கல் பரிசு பொருட்கள் லாரியில் நேற்று காலை வந்துள்ளது. அப்போது ரேஷன் கடையில் இடம் இல்லாததால் அனுமதி பெற்று எதிரே உள்ள நூலகத்தில் இறக்கி வைத்தனர். அப்போது பாஜ பிரமுகர் மது போதையில் அங்கு வந்ததாக தெரிகிறது. மேலும் யாரை கேட்டு இங்கு பொருட்களை வைத்தீர்கள். நீங்கள் பூட்டு போட்டால் நானும் இதில் ஒரு பூட்டு போடுவேன் என தகராறு செய்துள்ளார். போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரிந்ததும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories: