திமுக நேர்காணல் ஒத்தி வைப்பு

ஊட்டி, ஜன.8:  கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று மற்றும் 10ம் தேதி நடக்கவிருந்த திமுக நேர் காணல் நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் போட்டியிட விரும்பிய கட்சி தோழர்களுக்கான நேர் காணல் நிகழ்ச்சி 8ம் தேதி (இன்று) மற்றும் 10ம் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. எனவே, 8 மற்றும் 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நேர்காணல் ஒத்தி வைக்கப்படுகிறது. நேர்காணல் நடைபெறும் தேதி, பொங்கல் திருநாளுக்கு பின் அறுிவிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: