கொடுமுடி,அம்மாபேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி

கொடுமுடி,ஜன.8:கொடுமுடியில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசிமுகாம் நேற்று நடந்தது. எஸ்எஸ்வி மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த இம்முகாமில் 173 மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொம்பனை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூரணசந்திரன் மற்றும் செவிலியர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் அவர்கள் சம்மதத்துடன் தடுப்பூசி செலுத்தினர். மேலும் இதுதொடர்பாக பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் விளக்கமளித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளிதலைமை ஆசிரியை தங்கமணி மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.  இதே போல அம்மாபேட்டை பெரியசாமி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளியின் நிர்வாக குழுத் தலைவரும், முன்னாள் எம்பியுமான என்ஆர்.கோவிந்தராஜர் தலைமை தாங்கினார். அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஏ.திவாகர், நவநீதன் ஆகியோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தினர். பள்ளித் தலைமையாசிரியர் கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர் பிரபு, ஆசிரியைகள் முத்துலட்சுமி, ஸ்வப்னா தேவி, வேளாங்கன்னி,  செல்வி, பள்ளிக் குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: