கொரோனா தடுப்பூசி சான்றினை நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

ஈரோடு,ஜன.8:அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர் கொரோனா தடுப்பூசி சான்றினை நாளை (9ம் தேதிக்குள்) சமர்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.பரவலை கட்டுப்படுத்த 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர் 2 தவணைகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றினை நாளை (9ம் தேதி)க்குள் சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: